சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

என்.ஆர். காங்கிரஸில் இணைந்த மாவட்ட காங்கிரஸ் செயலர்

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில்  காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் செயலர் 

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:19 pm

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில்  காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் செயலர்  வி. ஆனந்தன் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலராக இருந்தவர் பொறியாளர் வி. ஆனந்தன். இவர் அவரது ஆதரவாளர்களுடன் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை சந்தித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.எம்.சி. சிவக்குமார், பி.ஆர். சிவா, காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர்  கே. கோவிந்தராஜ், வேளாண் அறிவியல்  நிலையத் தலைவர் ஏ. சுரேஷ், விற்பனைக் குழுத் தலைவர் கே.ஆர். உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.