கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி சார்பு அமைப்பான அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்திய கடல் எல்லையில் மீண்டும் இந்தியக் கடல் படையின் ரோந்து கப்பலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மீனவர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் வி. ஜெயபால் தலைமை வகித்தார்.
அகில இந்திய மீனவர் சங்கத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான எம். அப்பாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
அகில இந்திய மீனவர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். சம்பந்தம், இரெ. இடும்பையன், ஒன்றியச் செயலர்கள் ராமலிங்கம், டி. செல்வம், சிவகுருபாண்டியன், எம்.கே. நாகராஜன், இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்க நாகை மாவட்டத் தலைவர் ஏ.பி. தமீம் அன்சாரி, மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். மேகலா, இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் கே. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

