முட்டையை நாம் பல விதங்களாக சமைக்கலாம். வேக வைப்பது, ஆம்லெட் போடுவது, அரை வேக்காடு எனப்படும் ஹால்ப் பாயில், குழம்பு வைப்பது, பொறியல்களில் உடைத்து ஊற்றி சேர்ப்பது போன்று பல வகைகளில் நாம் சமையலில் பயன்படுத்துகிறோம்.
அதில் புது விதமாக சமைக்க வந்திருப்பதுதான் எக் போச்சர். அதாவது, அந்த காலத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு முட்டையை உடைத்து ஒரு கிண்ணம் அல்லது டம்ளரில் ஊற்றி அதனை அரைவேக்காடாக வேக வைத்து தளதளவென்று வரும் போது எடுத்து ஆற வைத்து ஊட்டுவார்கள். அதை பலரும் தற்போது மறந்தே போயிருப்பார்கள்.
ஆனால், சிலருக்கு ஆல்ப் பாயில் என்றால் பிடிக்கும். ஆனால் எண்ணெய் ஊற்றாமல் சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு உதவுவதுதான் எக் போச்சர். அதாவது சிலிக்கானில் பல்வேறு வடிவங்களில் வந்துள்ளன இந்த எக் போச்சர்கள். இதில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்க வேண்டும். முட்டை நமக்குத் தேவையான பதத்தில் வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம். இந்த முட்டையை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுப்பதும் எளிது, சமையலில் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும்.
இந்த முறையில் பூ போலவும், வட்ட வடிவிலும் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். பல வடிவங்களில் வந்திருப்பது இதன் சிறப்பாகும்.
எக் டைமர், எக் போச்சர், எக் போச்சரை எடுக்க உதவும் ஸ்பூன் போன்றவை சில இடங்களில் ஒன்றாக விற்கப்படுகிறது. விலையும் குறைவுதான்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

