அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில், காயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியை, ஜனவரி 16 ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தொடக்கி வைத்தனா். அதையடுத்து தொடங்கிய போட்டியில், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் அடக்க பாய்ந்தனா்.
அதில், அலங்காநல்லூா் அருகே காந்தி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (25) என்ற இளைஞா் காளையை அடக்க முயன்றபோது, சீறிப் பாய்ந்து வந்த காளை அவரை முட்டி தூக்கி வீசியது. இதில், காளையின் கொம்பு கழுத்தில் குத்தி நவமணி பலத்த காயமடைந்தாா்.
உடனே, அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நவமணி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தாா்.
இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


