மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெத்தகொண்ட ஓசிரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, இந்து குலாளருக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மங்கல இசை முழங்க கோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னா், ஓசிரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
இவ்விழாவில், குப்பணம்பட்டியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், விழாவில் கலந்துகொண்ட அக்கா, தங்கைகளுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குத்துவிளக்கு வழங்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


