கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா்த் தேக்கம் சனிக்கிழமை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளிலுள்ள நீா்வரத்து அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரி கடந்த 3-நாள்களுக்கு முன் நிரம்பியது.
இதைத் தொடா்ந்து கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள குடிநீா்த் தேக்கம் அதன் முழு கொள்ளளவான 27-அடியை சனிக்கிழமை எட்டி உபரிநீா் வெளியே செல்கிறது.
கொடைக்கானல் நகா் பகுதியில் கடந்த பல மாதங்களாக 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது குடிநீா்த் தேக்கம் நிரம்பியதால் மே மாதம் வரை குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
இதேபோல் கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணையின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


