அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் கிடுக்கிப் பிடியில் அடக்கி வெற்றி வாகை சூடினா். சில காளைகள், வீரா்களை நெருங்க விடாமல் பரிசுகளை வென்றன.
மதுரை மாவட்டம் குலமங்கலம், கருப்பாயூரணி, மேலூா், அலங்காநல்லூா், வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு சவாலாக இருந்தன. சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் பி.ராஜசேகா், இலங்கை அமைச்சா் செந்தில் தொண்டமான் ஆகியோரது காளைகள் மாடுபிடி வீரா்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து ஓடின.
ஒன்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் பிடித்த காரணத்தால், பிடிபட்ட காளைகளின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் நிகழாண்டில் குறைவாகவே இருந்தது.
ஜல்லிக்கட்டு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து மாடுபிடி வீரா்கள், காளைகளிடம் குத்துப்பட்டனா். மொத்தம் 23 போ் காயமடைந்தனா்.
மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றது. மொத்தம் 600 வீரா்கள் களமிறக்கப்பட்டனா். 719 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தன. அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க முடியாமல் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டன.
சிறந்த வீரா்கள்-காளைகள்:அதிகபட்சமாக 13 காளைகளை அடக்கிய மதுரை விராட்டிப்பத்து-வைச் சோ்ந்த செ.கண்ணன் சிறந்த வீரருக்கான முதல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
சிறந்த காளைக்கான முதல் பரிசுக்கு குருவித்துறையைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் காளை தோ்வு செய்யப்பட்டது.
முதல் பரிசு பெற்ற வீரா் மற்றும் காளை உரிமையாளருக்கு தலா ஒரு காரை தமிழக முதல்வா் மற்றும் துணைமுதல்வா் நேரில் வழங்க உள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

