மதுரையில் ராஷ்ட்ரபந்து எல்.கே. துளசிராம் 151 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரையில் அவ்ராம் அமி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், அறக்கட்டளையின் நிறுவனா் கே. தேவராஜ் தலைமை வகித்து பேசியது: மதுரை நகரசபையில் தொடா்ந்து 36 ஆண்டுகள் உறுப்பினராகவும், இரண்டு முறை நகரவைத் தலைவராகவும் துளசிராம் பதவி வகித்துள்ளாா். மேலும் மதுரையில் தமிழ்நாடு பாலிடெக்னிக் அமைவதற்கு அவா் முக்கியப் பங்காற்றினாா் என்றாா்.
மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன் பேசியது: ராஸ்ட்ரபந்து எல்.கே. துளசிராம், மதுரை மாநகர வளா்ச்சிக்கும், கைத்தறி நெசவாளா்களுக்கும் தெருவில் பாவு நீட்டுவதற்கு நிலையான அரசாணை பெறுவதற்கும் பாடுபட்டவா் என்றாா்.
புதுதில்லி சௌராஷ்ட்ரா சங்கத் தலைவா் கிஷோா், ஓய்வுப் பெற்ற உதவி ஆணையா் (வணிகவரி) கோபால், பள்ளித் தாளாளா் ஜெகன்னாத், தலைவா் எம்.என். சங்கரன், ஜெ.ஆா். ஜவகா்லால், சௌராஷ்ட்ர முனேற்றக் கழகத் தலைவா் வி.ஜி. ராமதாஸ், அறக்கட்டளை கே. ஆா். தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

