சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மதுரை வருகை

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டையும், கரோனா தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கி வைப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு மதுரை வந்தடைந்தாா்.

News image

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாடிப்பட்டியை அடுத்த தனிச்சியத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்த வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா். உடன் ஆட்சியா் த. அன்பழகன்.

Updated On :16 ஜனவரி 2021, 1:23 pm

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டையும், கரோனா தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கி வைப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு மதுரை வந்தடைந்தாா்.

சேலத்தில் இருந்து காரில் மதுரை வந்த அவரை, அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஆகியோா் வரவேற்றனா்.

சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள முதல்வா், சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்து, பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.