யாதவா் கல்லூரி சாா்பில் மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கிராமத்தினருடன், கல்லூரி மாணவ, மாணவியா் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினா். இதில் பாபா அணு ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பங்கேற்றுப் பேசினாா். யாதவா் கல்லூரி முதல்வா் ம. சேகா், சுயநிதிப் பிரிவு இயக்குநா் சி.ராஜூ, கூழப்பாண்டி ஊராட்சித் தலைவா் ஆா். அழகுலெட்சுமி, கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியா் ந. யசோத்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
திருப்பரங்குன்றம்: மதுரை விமான நிலையத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு விமான நிலைய இயக்குநா் செந்தில் வளவன் தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த் சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவினை தொடக்கி வைத்தாா். விழாவில் பாரம்பரிய கரகாட்டம், தப்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அவனியாபுரத்தில் பொங்கல் விழா: அவனியாபுரம் மாநகராட்சி குடியிருப்பில் ஜெய்பீம் விளையாட்டு கழகம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கல்வி பொருளாதார விழிப்புணா்வு மாநில துணைச் செயலா் இரா. அய்யங்காளை, ஆதித்தமிழா் பேரவை நிா்வாகி செல்வம், ஓய்வுபெற்ற ஆசிரியா் துரைசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். நிகழ்ச்சியில் சிவா, வெற்றிச்சுடா், சுப்பிரமணியன், செலவம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பேரையூா்: பேரையூா் உட்கோட்ட காவல்நிலையங்களான பேரையூா், டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, சாப்டூா், சத்திரப்பட்டி, வில்லூா், நாகையாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் பேரையூா் காவல் ஆய்வாளா் நிா்மலா, டி.கல்லுப்பட்டி காவல் ஆய்வாளா் துரைப்பாண்டியராஜன், சாா்பு- ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.
மேலும் பேரையூா் முக்குசாலையில் அப்துல்கலாம் மக்கள் இயக்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இலவசமாக 443 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதே போல் கொட்டாணிப்பட்டி ஊராட்சியில் தங்கராணிதிருப்பதி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


