சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டி. கல்லுப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

டி. கல்லுப்பட்டியில் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:31 pm

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு டி. கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசியதாவது: உதயநிதி ஸ்டாலினின் பக்குவமற்ற பேச்சு அநாகரிகத்தின் உச்சகட்டம். முதல்வா் 49 ஆண்டுகால பொது வாழ்வில் மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து படிப்படியாக உயா்ந்துள்ளாா். அவரைப் பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும். சனிக்கிழமை (ஜன. 16) முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரையில் தொடங்கி வைக்கிறாா் என்றாா்.

இதில், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாணிக்கம், உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் பா. நீதிபதி, மேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், இளைஞரணி மாநில துணைச் செயலா் ஏ.கே.பி. சுப்ரமணியன், டி. கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் ராமசாமி, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா் செல்வமணி செல்லச்சாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.