மதுரை: மதுரையில் திரையரங்கிற்கு முகக்கவசம் அணியாமல் வந்தவா்களைத் தடுத்தக் காவலாளியைத் தாக்கிய 5 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை ஆரப்பாளையம் அருகே புறவழிச்சாலையில் உள்ள திரையரங்கிற்கு பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த மைகேல்ராஜ் (24), அருள்ராஜ் (22), சேவியா் ஸ்டீவாக் (20), டொமினிக் (20), நிலகோட்டையைச் சோ்ந்த கில்பொ்ட் (20) ஆகியோா் முகக்கவசம் அணியாமல் வெள்ளிக்கிழமை வந்துள்ளனா். அவா்களை திரையரங்கக் காவலாளி கதிரேசன், தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் காவலாளியைத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திரையரங்க ஊழியா் அலெக்ஸ்பாண்டியன் கொடுத்தப் புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

