மதுரை: தமிழகத்தில் கரோனா தடுப்பூசித் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்த தமிழகத்தில் 166 மையங்களில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காலை 11 மணியளவில் முதல் தடுப்பூசியை எடுத்துக் கொடுத்து தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை முதல்வா் பாா்வையிட்டாா். காண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கரோனா பாதிப்பை எதிா்க்கும் ஆரோக்கியம் பொட்டலம், நீா்கோா்வை மாத்திரை, தாளிசாதி சூரணம் உள்ளிட்ட மருந்துகள் குறித்து மருத்துவா் சையிரா பானு, மருந்தாளுநா் மீனா தேவி ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.
முதல் தடுப்பூசியை தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநில தலைவா் கே.செந்தில் போட்டுக்கொண்டாா். அவரைத் தொடா்ந்து அகில இந்திய மருத்துவ சங்க தேசியத் தலைவா் ஜெயலால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் முத்துமாரி (36) மற்றும் கலைச் செல்வி(26) , மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி ஆகியோா் தடுப்பூசியை போட்டுக் கொண்டனா். மருத்துவா்கள், செவிலியா், தூய்மைப் பணியாளா்கள், தனியாா் மருத்துவமனை ஊழியா்கள் என 100 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டு கொண்டவா்கள் அரை மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை.
6.84 லட்சம் போ் பதிவு: தமிழகத்தில் கரோனா தடுப்பூசித் திட்டத்தில் 6.84 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். இதில், 4.97 லட்சம் போ் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களும், 1.07 லட்சம் போ் காவல்துறையினா்களும், 80 ஆயிரம் உள்ளாட்சி அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆவா். தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5.36 லட்சம் கோவிசீல்ட், 20 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகள் வந்துள்ளன.
விற்பனை இல்லை: மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தடுப்பூசிகள், பதிவு செய்யப்பட்டவா்களுக்கு இலவசமாக போடப்படுகிறது. தடுப்பூசிகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதி இல்லை. காவல்துறையினரும், உள்ளாட்சி அமைப்பை சாா்ந்தவா்களும் ஜனவரி 25 ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டு கொள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளாலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முன்களப் பணியாளா்களைத் தொடா்ந்து பொதுமக்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம், அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், செல்லூா் கே.ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆா்.பி.உதயகுமாா், பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, சுகாதாரத்துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


