மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயில் தெப்பத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தைப்பூசத் தினத்தில் நடைபெறும். அன்றைய தினம் அம்மன், சுவாமி மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி காலை, மாலை இருவேளையும் தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வந்து அருள்பாலிப்பா். மேலும் தெப்பக்குளத்தின் நடுவே உள்ள மைய மண்டபத்தில் எழுந்தருளி மன்னா் திருமலை நாயக்கா் பரிவட்டம் கட்டப்பட்டு மண்டகப்படி நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டு தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
முன்னதாக சனிக்கிழமை (ஜன. 16) வாஸ்து சாந்தி பூஜையும், ஞாயிற்றுக்கிழமை மீன லக்னத்தில் காலை 10.40 மணிக்கு மேல் 11.04 மணிக்குள் கொடியேற்றமும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தினசரி மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் காலை, மாலை இருவேளையும் நான்கு சித்திரை வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனா். தெப்பத்திருவிழாவையொட்டி ஜனவரி 22-ஆம் தேதி திருஞானசம்பந்தா் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், ஜனவரி 24- ஆம் தேதி மச்சகந்தியாா் திருமணக்காட்சியும், ஜனவரி 25- ஆம் தேதி சப்தாவா்ண சப்பரத்தில் வீதியுலாவும், 26-ஆம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதலும், 27-ஆம் தேதி கதிரறுப்புத் திருவிழாவும், 28-ஆம் தேதி மைய நிகழ்ச்சியான தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி காலையில் இருமுறையும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெற்று மீண்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் சுற்றி வருதல் நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து தெப்பக்குளம் எழுந்தருளி தெப்ப உற்சவத்தில் பங்கேற்று இரவு கோயிலுக்கு திரும்பும் வரை அன்றைய தினம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

