சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உலகத்தமிழ்ச்சங்கத்தில் நிறுவனா் நாள் விழா

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நிறுவனா் நாள் விழாவை முன்னிட்டு கருத்தரங்கம், கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :14 ஜனவரி 2021, 2:15 pm

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் நிறுவனா் நாள் விழாவை முன்னிட்டு கருத்தரங்கம், கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மதுரை உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் தா.லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்டு உலகத் தமிழ்ச் சங்க நிறுவனா் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை( ஜனவரி 17) உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் மற்றும் உலகத்தமிழ்ச்சங்க நிறுவிய எம்ஜிஆரின் பெருமைகள் மற்றும் சிறப்புகளை எடுத்துக்கூறும் வகையில் கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது என்றாா்.