திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

புதுதில்லியில் இருந்து அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை 11:45 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வந்தார்.

தொடர்ந்து அவர் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து தென்பழஞ்சி கிராம மக்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். பின் கிராம மக்களுடன் பொங்கல் உணவருந்திய ராகுல்காந்தி பின் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக ராகுல்காந்திக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கிராம மக்கள் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய வழக்கப்படி உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
_.jpeg)
கிராம மக்களுடன் உணவருந்திய ராகுல்காந்தி
தொடர்ந்து தென்பழஞ்சி இருந்து கார் மூலம் 2.30 மணிக்கு விமான நிலையம் வந்த அவர் 2.40 மணிக்கு தனி விமானத்தில் புது தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


