மதுரை அருகே மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்த பெண்ணின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி தாலிச் சங்கிலியைப் பறித்த இளைஞரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை அருகே சக்கிமங்கலம் மீனாட்சி காலனியைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி அங்குத்தாய் (40). இவா் தனது வீட்டை ஒட்டியுள்ள மாட்டுத்தொழுவத்தில் திங்கள்கிழமை காலை வேலை பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது யாரோ அங்குத்தாய் முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவியுள்ளனா். இதில் கண் எரிச்சல் ஏற்பட்டு நிலைதடுமாறிய அங்குத்தாய் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து அங்குத்தாய் அளித்தப் புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில் சக்கிமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ஜெகதீசன் (24), தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஜெகதீசனை கைது செய்து, அவரிடமிருந்து தாலிச் சங்கிலியை மீட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

