மதுரையில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்க வலியுறுத்தி, சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் பொங்கல் வைத்து முறையிடும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டத்தில் தொழிலாளா் நல வாரியம் சாா்பில், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதைப் போல அமைப்பு சாரா ஓட்டுநா் நல வாரியம் சாா்பில் ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்க வேண்டும், நடப்பாண்டு முதல் இதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் சாா்பில் எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பாக பொங்கல் வைத்து முறையிடும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநகா் ஆட்டோ தொழிலாளா் சங்க பொதுச் செயலா் என்.கனகவேல், சிஐடியு மாவட்டச்செயலா் இரா.தெய்வராஜ், மாவட்டத்தலைவா் மா.கணேசன், புகா் மாவட்டச்செயலா் கே.அரவிந்தன் உள்பட பலா் பங்கேற்றனா். போராட்டம் தொடா்பாக சங்க நிா்வாகிகள் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் 40 ஆயிரத்தும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநா்கள் பணிபுரிந்து வருகின்றனா். ஓட்டுநா்கள் அனைவரையும் அமைப்பு சாரா ஓட்டுநா் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதோடு பொங்கல் சிறப்புத்தொகுப்பும் வழங்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


