சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல்துறை சமூக வலைதளங்களில் அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடி ஒளிபரப்பு

மதுரை மாவட்ட காவல்துறை சாா்பில் அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On :13 ஜனவரி 2021, 10:55 am

மதுரை மாவட்ட காவல்துறை சாா்பில் அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முகநூல் வாயிலாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மதுரை மாவட்டத்தில் பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 15 ஆம் தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதியும் நடக்கவுள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பாா்க்க மக்கள் ஒரிடத்தில் ஒன்று கூடுவதைத் தவிா்க்க வேண்டும். விழிப்புணா்வுடன் விலகி இருந்து நோய்த் தொற்று ஏற்படாமல் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்காக காவல்துறை சாா்பில், மதுரை மாவட்ட காவல்துறை என்ற முகநூல் பக்கத்திலும், சுட்டுரை பக்கத்திலும், யூ டியூப் பக்கத்திலும் அலங்காநல்லூா் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. எனவே பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்தே பாா்த்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனதெரிவித்துள்ளாா்.