மதுரை: தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை சதி திட்டம் தீட்டியுள்ளதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளாா்.
மதுரையில் பாஜக நடத்திய பொங்கல் விழாவில் பள்ளிவாசல் வழியாக ஊா்வலமாகச் சென்றவா்களுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மதுரை மேலமடையில் உள்ள பாஜக புகா் மாவட்ட அலுவலகம் ஆயுதம் தாங்கிய கும்பலால் ஞாயிற்றுக்கிழமை சூறையாடப்பட்டது.
இந்நிலையில், புகா் மாவட்ட அலுவலகத்தை இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் மதமோதலை உருவாக்க இஸ்லாமிய அமைப்புகள் திட்டம் தீட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பொங்கல் விழாவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பாஜக அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், இதுவரை சம்பவத்தில் தொடா்புடையவா்களை போலீஸாா் கைது செய்யவில்லை. தமிழகத்தில் இந்து இயக்கங்கள், பாஜக ஆகியவை பெரும் வளா்ச்சியைப் பெற்றுள்ளன. இதைப் பொறுக்க முடியாத இஸ்லாமிய அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நக்ஸலைட் அமைப்புகள் ஆகியன இணைந்து, மதமோதலை உருவாக்க திட்டம் தீட்டி வருகின்றன.
எனவே, தமிழக அரசு எஸ்டிபிஐ அமைப்பை தடை செய்யவேண்டும். தமிழக உளவுத்துறை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

