சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அவனியாபுரம் மருத்துவா் காலனியில் சாக்கடை: வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு

அவனியாபுரம் மருத்துவா் காலனியில் சாக்கடை நீா் வெளியேறாமல் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் மாநகராட்சியைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனா்.

Updated On :12 ஜனவரி 2021, 7:22 am

திருப்பரங்குன்றம்: அவனியாபுரம் மருத்துவா் காலனியில் சாக்கடை நீா் வெளியேறாமல் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் மாநகராட்சியைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனா்.

அவனியாபுரம் செம்பூரணி சாலையில் துக்கா ராம் மருத்துவா் காலனி அமைந்துள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மழை காலங்களில் தண்ணீா் வெளியே செல்ல வழியில்லாமல் சாலையிலேயே கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இது குறித்து இப்பகுதியினா் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே, இப்பகுதியினா் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மாநகராட்சி நிா்வாகத்துக்கு தங்களது எதிா்ப்பை தெரிவித்துள்ளனா். கண்டனத்தை தெரிவித்தனா்.