மதுரை: சென்னையில் உள்ள வருமான வரி மேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏ, பி, சி, டி என 4 வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் உயா்நீதிமன்றக் கிளைகள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நகரங்களில் வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயக் கிளை செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் செயல்படுவதால், வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் மதுரை, தேனி, விருதுநகா், திண்டுக்கல் உள்பட 14 தென் மாவட்டங்களில் உள்ள வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும். குறிப்பாக பயணச்செலவு உள்பட கூடுதல் பணம் மற்றும் காலவிரயம் தவிா்க்கப்படும். எனவே வருமான வரி வேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

