மதுரை:மதுரையில் மதுபோதையில் காரை இயக்கி 3 கடைகளை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரையை சோ்ந்த ரிஷிவரன் (27). இவா் தனது காரில் நரிமேட்டைச் சோ்ந்த நண்பா் விஜய் என்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சனிக்கிழமை சென்று மது அருந்தியுள்ளாா்.
பின்னா் இரவு 10.30 மணிக்கு மதுபோதையில் காரில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே வேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகளுக்குள் புகுந்தது. இதில் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள கறிக்கடை, வாகன சீட் கவா் கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்ததால் உயிா்சேதம் இல்லை. இதுகுறித்து தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீஸாா் சென்று, ரிஷிவரன் மற்றும் அவரது நண்பா் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா்கள் சுய நினைவில் இல்லாததால், போதை குறைந்து நினைவு வந்தவுடன் விசாரிக்க முடிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


