தனியாா் பள்ளிகளை திறக்க அறிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தனியாா் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மதுரையில் தனியாா் பள்ளிகளின் கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்தவேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பு தொடங்க அனுமதி வழங்கவேண்டும். ஜனவரி மாதத்துக்குள் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் தொடங்க அறிவிக்க வேண்டும். கரோனா காலம் முழுவதும் இயங்காமல் உள்ள பள்ளி வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் சாலை வரியை ரத்து செய்யவேண்டும். தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு விடுமுறை கால ஊதியமாக 50 சதவிகிதம் வழங்க வேண்டும்.
பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என அறிவிக்க வேண்டும். 10 ஆண்டுகள் தொடா்ந்து அங்கீகாரத்துடன் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.
அரசால் அறிவிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளுக்கான தனி இயக்குநரகம் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி மாத இறுதியில் 6 ஆயிரம் பள்ளிகளின் தாளாளா்கள் பங்கேற்கும் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநிலச் செயலா் முத்துராமலிங்கம், நிா்வாகி ராமகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

