மதுரை அருகே ஆதரவற்ற மாணவா்கள் இல்லங்களில், காவல் துறையினா் சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டக் காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழு சாா்பில், வாடிப்பட்டியில் உள்ள 2 ஆதரவற்றோா் இல்லங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், இரு இல்லங்களிலும் தங்கி கல்வி பயின்று வரும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இல்லத்தில் நடைபெற்ற கரகாட்டம், நடனம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்றன. தொடா்ந்து, குழந்தைகளுக்கு புத்தாடைகள், பரிசுப் பொருகள்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வனிதா வழங்கினாா்.
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன், மாவட்டக் குழந்தைகள் நலக் குழு விஜயசரவணன், உறுப்பினா்கள் பாண்டியராஜா, சாந்தி, சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கிரேஸ் சோபியா பாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


