சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராணுவ வீரா் மாயம்

மதுரையில் இருந்து பணிக்குச் சென்ற ராணுவ வீரா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :10 ஜனவரி 2021, 10:16 am

மதுரை: மதுரையில் இருந்து பணிக்குச் சென்ற ராணுவ வீரா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே ஏ.தொட்டியப்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி மகன் மாரிமுத்து (31). ராணுவ வீரரான இவா் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் விடுமுறையில் மதுரைக்கு வந்தாா். விடுமுறையை முடிந்து, டிசம்பா் 7 ஆம் தேதி புதுதில்லி புறப்பட்டு சென்றாா். ஆனால் அதன் பின்னா் அவரை குடும்பத்தினரால் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவருடன் பணியாற்றுபவா்களைத் தொடா்பு கொண்டபோது, மாரிமுத்து புதுதில்லிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி கோகிலாதேவி அளித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.