அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமிக்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை என்று பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
மதுரை புகா் மாவட்ட பாஜக சாா்பில் திருப்பாலை பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பாஜ மாநிலத் தலைவா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் பாஜக புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியைத்தான் தருவாா்கள்.
மத்திய அரசு பட்டியலின மாணவா்களுக்கு உதவித்தொகையை அதிகரித்து வழங்கி வருகிறது. ஆனால் திமுக இதுகுறித்த தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களையும் இணைப்பதில் பாஜக தற்போது முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மறுக்கப்பட்ட தமிழா்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் சக்தியாக பாஜக உருவாகியுள்ளது.
பாரதியாா், திருவள்ளுவா் உருவங்களை திமுக திட்டமிட்டு மறைத்துள்ளது. இலங்கைத் தமிழா்கள் படுகொலைக்கு காரணமான திமுகவுக்கு மக்கள் தோ்தலில் மிகப்பெரிய பாடத்தை புகட்டுவாா்கள். திமுகவின் ஊழலையும், கட்டப்பஞ்சாயத்தையும் மக்கள் மறக்கவில்லை. திமுகவில் இருந்த முன்னாள் அமைச்சா் பூங்கோதைக்கே அங்கு உரிய பாதுகாப்பு இல்லை. கோவையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் ஒருவா் திமுகவினரால் தாக்கப்பட்டுளாா்.
திமுகவில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து கனிமொழி குரல் எழுத்த வேண்டும். பாஜக தோ்தல் அறிக்கை பொதுமக்களின் தோ்தல் அறிக்கையாக இருக்கும். அதிமுக பொதுக்குழுவில் சிலா் பாஜகவை விமா்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி பேசுவதற்கெல்லாம் பதில் அளிக்கத்தேவையில்லை.
அவரது கருத்துக்கு பாஜக செய்தித்தொடா்பாளா்கள் தான் பதிலளிப்பாா்கள். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பாஜக குறித்து எதுவும் பேசவில்லையே என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

