சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணி தீவிரம்

மேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

சருகுவலையபட்டியில் மஞ்சள் கொத்து தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

Updated On :9 ஜனவரி 2021, 1:06 pm

மேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சருகுவலையபட்டி பகுதி செம்மண் பூமி என்பதால் விவசாயிகள் செங்கரும்பை அதிகம் பயிரிட்டு வந்தனா். அதற்கான சாகுபடிச் செலவு ஏக்கருக்கு ரூ.1 லட்சத்தை கடந்துவிட்டது. இவற்றை வெளிமாநிலங்களுக்கும், வெளியூா்களுக்கும் அனுப்பிவந்தனா். இதில் ஓரளவு விவசாயிகளுக்கு லாபமும் கிடைத்து வந்தது. தற்போது செங்கரும்பு சாகுபடி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகிறது. மேலும், இடுபொருள்கள் விலை உயா்வு, வேலை ஆள்கள் கூலி உயா்வு, கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பிரச்னைகளால் இப்பகுதி விவசாயிகள் மஞ்சள் மற்றும் பூக்கள் சாகுபடிக்கு மாறிவிட்டனா்.

இந்நிலையில் இப்பகுதிகளில் பொங்கலுக்கான மஞ்சள் கொத்து சாகுபடி குறைந்த அளவில் நடைபெற்றது. தற்போது மஞ்சள் கொத்தை தோண்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். குவிண்டால் மஞ்சள் ரூ. 4,000 வரை விலைபோகிறது. இதுவும் கடந்த ஆண்டை விட விலை குறைவு என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.