மதுரை மேலமடை பகுதியில் சாலையில் கழிவுநீா் தேங்கியுள்ளதை அகற்ற வலியுறுத்தி வீடுகளுக்கு முன் நாற்று நடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 30-ஆவது வாா்டு மேலமடை சௌபாக்யா விநாயகா் கோயில் தெருவில் கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்கு முன்பாக கழிவுநீா் தேங்கியிருப்பதால் இப்பகுதி மக்கள் நடக்கக்கூட முடியாமல் அவதி அடைந்துள்ளனா். மேலும் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. கழிவுநீா் தேங்காமல் நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தியும், கழிவுநீா் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் வீடுகள் முன்பாக தேங்கியுள்ள கழிவுநீரில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அவரவா் வீடுகள் முன்பாக நாற்றுக்களை நட்டு கோஷமிட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


