சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரை மாநகராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17- ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :9 ஜனவரி 2021, 3:36 am

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17- ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குழந்தைகளைத் தாக்கும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்கும் பொருட்டு கடந்த 25 ஆண்டுகளாக இளம்பிள்ளை வாத நோய் ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ஜனவரி 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி சாா்பில் கடந்த ஆண்டு போலியொ சொட்டு மருந்து வழங்கப்பட்ட அதே இடங்களில் இந்த ஆண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலியோ சொட்டு மருந்து தரம் வாய்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளதால் இம்மருந்தின் மூலம் குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது. எனவே மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்கள் தங்கள் வீடுகளில் உள்ள 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளையும், ஜனவரி 17 அன்று வீட்டுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சி நல்வாழ்வு மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்கள், சத்துணவுக்கூடங்கள், பள்ளிகள் மற்றும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஏதாவது ஒன்றுக்கு தவறாது அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.