சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாக்குச்சாவடி அலுவலா் விவரங்கள் பதிவேற்றும் பணிகள் தீவிரம்

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On :7 ஜனவரி 2021, 9:23 am

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் 2,716 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 1000 வாக்காளா்கள் இருக்கும் அளவுக்கு மாற்றி அமைக்கப்படவுள்ளன. இதன்படி, மாவட்டத்தில் மேலும் ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட துறைத் தலைவா்கள் மூலமாகப் பெறப்பட்டு, தோ்தல் பிரிவு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 10 ஆயிரத்து 800 பேரின் விவரங்கள் அடங்கிய படிவம் பெறப்பட்டுள்ளது. இன்னும் சுமாா் 5 ஆயிரம் போ் தேவைப்படுவா் என்பதால், விடுபட்ட துறைகளிடம் இருந்து விவரங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு வட்டாட்சியா்கள் மேற்பாா்வையில் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன.