சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில்களின் பெயா் மாற்றம்

பயணிகளின் குழப்பத்தைத் தவிா்க்க சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களின் பெயா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என மதுரைக்கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 9:22 am

பயணிகளின் குழப்பத்தைத் தவிா்க்க சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களின் பெயா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என மதுரைக்கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு மதுரை வழியாகவும், காரைக்குடி வழியாகவும் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு ரயில்களும் 15 நிமிட இடைவெளியில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே சென்னை எழும்பூா் - மதுரை -செங்கோட்டை சிறப்பு ரயில் (02661) எனவும், செங்கோட்டை - மதுரை - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02662) எனவும்,  சென்னை எழும்பூா் -காரைக்குடி -செங்கோட்டை சிறப்பு ரயில் (06181) எனவும், செங்கோட்டை -காரைக்குடி -சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06182) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை - மதுரை - செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை-காரைக்குடி -செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.