தூத்துக்குடியில் காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த குமாா் தாக்கல் செய்த மனு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளுக்கு உரிய அனுமதி பெறப்படுகிா எனக் கேட்டிருந்தேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல காற்றாலைகள் முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தெரியவந்தது. பெரும்பாலும் காற்றாலைகள் விளைநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி விமான நிலையம் அருகே 10 கி.மீ. சுற்றளவுக்கு காற்றாலைகள் அமைக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் அப்பகுதியிலும் விதிமீறி காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தூத்துக்குடியில் காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப். 11-க்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

