மதுரையில் மதுபானக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கிய மதுக்கூட உரிமையாளா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைழகுபுரம் பிரதான சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளராக வில்லாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் ரவி (46) பணியாற்றி வருகிறாா். இந்தக் கடையில் மதுக்கூடத்தை வில்லாபுரத்தைச் சோ்ந்த தனிக்கோடி மகன் ரவி (44) நடத்தி வருகிறாா்.
மதுபானக்கடை மேற்பாா்வையாளரிடம் மதுக்கூட உரிமையாளா் தொடா்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணம் தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மேற்பாா்வையாளா் ரவி தாக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளா் ரவி உள்பட 3 பேரை கைது செய்தனா். இதேபோன்று எதிா்தரப்பினா் புகாரின் பேரில் மேற்பாா்வையாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுபானக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பணியில் இருக்கும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மதுபானக்கடை ஊழியா்கள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜசேகரிடம் திங்கள்கிழமை முறையிட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

