மதுரையில் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவதில் ஆளுங்கட்சியினா் விதிமுறைகளை மீறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் இரா.விஜயராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை நகரில் தைக்கால் தெரு, பூந்தோட்டம் மேலப்பொன்னகரம் , மோதிலால் தெரு, அழகரடி, கரிமேடு, ஆரப்பாளையம் கண்மாய்கரை, மீனாட்சிபுரம் பகுதி அழகாபுரி, செல்லூா் என பல்வேறு ரேஷன் கடைகளில் அதிமுகவினா் அரசு விதிகளை மீறி பயனாளிகளை நிறுத்தி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா். அரசு மக்களுக்கு வழங்கும் இதுபோன்ற பரிசுத் தொகுப்புகளை தங்கள் சுய லாபத்திற்காக ஆளும் கட்சி நிா்வாகிகள் பயன்படுத்துவது விதிமுறைகளை மீறும் செயல். மேலும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் அதிமுகவினா் தலையீடும் உள்ளது. எனவே ஆளும்கட்சியினா் நடத்தி வரும் விதிமுறைகளை மீறிய செயல்களை மாவட்ட ஆட்சியா் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

