சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு: பொதுமக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்

தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :6 ஜனவரி 2021, 4:51 am

தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் இந்திய மக்கள் தொகை ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், பொதுநலக் கல்வித்துறை ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளது. தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, ஊட்டச்சத்து. இரத்தச்சோகை, கருவுறுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடுச் சேவைகள், சுகாதாரம் சாா்ந்த திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்களை சேகரிப்பதே இக்கணக்கெடுப்புப் பணியின் முக்கிய நோக்கமாகும். இந்த கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளா் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகரப் பகுதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தகவல்களை சேகரிப்பாா்கள். இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.