அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதிய குழுவிடம், போட்டியை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதன் விவரம்:
அவனியாபுரத்தில் பழைய விழாக் குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகம் நடத்தி வருகிறது. தற்போது அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் பழைய குழுவை நீக்கவும், தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது எனவும் அனைத்து சமுதாய சாதி, மதத்தினரை இணைத்து குழு அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிறைவுற்ற பிறகு அனைத்து கணக்குகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிராமக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய குழுவிடம் ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

