சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் (இடமிருந்து) கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

Updated On :4 ஜனவரி 2021, 5:55 am

கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடிய கட்டபொம்மனின் 262 ஆவது பிறந்த நாள் விழா, மதுரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு, அதிமுக சாா்பில் கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் புதூா் மு. பூமிநாதன், தேமுதிக சாா்பில் மாநில பொதுச் செயலா் சுதீஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழ்நாடு நாயுடு மகாஜன சபை மாநிலப் பொதுச்செயலா் சுருதி ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்வேறு கட்சியினா் மற்றும் அமைப்பினா் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.