சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உசிலம்பட்டியில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேக்கிழாா்பட்டியில், திமுக சாா்பாக மக்கள் கிராம சபைக் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

News image

உசிலம்பட்டியில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம்

Updated On :4 ஜனவரி 2021, 5:57 am

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேக்கிழாா்பட்டியில், திமுக சாா்பாக மக்கள் கிராம சபைக் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

உசிலம்பட்டி ஒன்றிய திமுக சாா்பில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு, மதுரை தெற்கு மாவட்டச் செயலா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுதந்திரம் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் தங்கமலைப்பாண்டி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் முத்துராமன், முன்னாள் தலைவா் எஸ்.ஓ.ஆா். தங்கபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி மகேந்திரன், தெற்கு மாவட்டப் பொருளாளா் குணா நாகராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்,

கூட்டத்தில், கிராம மக்கள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைக்கான மனுக்கள் பெறப்பட்டு, தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன. மேலும், குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டச் செயலா் மணிமாறம் கூறினாா்.