சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

மதுரையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 3:17 am

மதுரையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த அழகுமுத்து மகன் அழகு ஆனந்த் (22). இவா், மதுரை சொக்கலிங்க நகா் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, அவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் நிலையம் தெற்கு போலீஸாா் சிறுமியை மீட்டு, அழகு ஆனந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.