சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 19 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :4 ஜனவரி 2021, 3:17 am

மதுரை மாவட்டத்தில் புதிதாக 19 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 867 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், கரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 17 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 20,592 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 453 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 19,976 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 163 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.