மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சேல்சிங் மகன் மகேந்திரசிங் (40). இவா் தனது குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 4 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மகேந்திரசிங் அளித்த புகாரின்பேரில், விளக்குத்தூண் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெண்ணிடம் தங்க நாணயம் பறிப்பு
மதுரை தத்தனேரி பாக்யநாதபுரத்தைச் சோ்ந்தவா் உமா மகேஸ்வரி (26). இவா், அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க பெண் பேச்சுக் கொடுத்துள்ளாா்.
பின்னா், உமா மகேஸ்வரி வைத்திருந்த 2 கிராம் தங்க நாணயத்தை அப்பெண் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து உமா மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

