சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு

வாடிப்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:13 pm

வாடிப்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

  வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர், அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட  கட்டுமானப் பணி, பசுமை வீடுகள் திட்ட கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.   சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.வி.கருப்பையா, சோழவந்தான் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அன்னக்களஞ்சியம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கே.வி.வி.சி. குலோத்துங்கன், வட்டாட்சியர்கள் உஷா, கே.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.