சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மெட்ராஸ் கபே வழக்கு: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய டி.ஜி.பி., தணிக்கை குழுவுக்கு உத்தரவு

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிரான மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி., மத்திய

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:16 pm

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிரான மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி., மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு

 சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் பி.ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

   இத் திரைப்படம் திரையிடப்பட்டால், தமிழர்கள் வாழும் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்று அம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், டி. மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜகோபாலன், இந்த திரைப்படம் தமிழர்கள் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்தவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவில்லை. இத் திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறுவது கற்பனையானது என்று குறிப்பிட்டார்.

 இந்த நிலையில், இத் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்க திரைப்படத்தைத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார்.

  தமிழ்மொழியாக்கத் திரைப்படத்துக்கு, மத்தியத் தணிக்கை குழுவிடம் இதுவரை சான்றிதழ் பெறவில்லை. தணிக்கைக் குழுவின் சான்றிதழ் இன்னும் பெறப்படவில்லை என்ற நிலையில், அதற்கு தடைகோர வேண்டிய அவசியம் எழவில்லை என தயாரிப்பாளர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

 இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீது இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  மேலும், தமிழக டி.ஜி.பி. மற்றும் திரைப்படத் தணிக்கைக் குழுவினர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.