பத்தாம் பொதுத் தேர்வில், மதுரை மாவட்டத்தில் 15 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
மதுரை மாவட்டத்தில் 438 பள்ளிகளில் இருந்து 44,767 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில், 41,828 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 15 அரசுப் பள்ளிகள் உள்பட 188 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
சதமடித்த அரசுப் பள்ளிகள்:
கடந்த ஆண்டில் 9 அரசுப் பள்ளிகள் மட்டுமே நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றிருந்தன. இந்த ஆண்டில் அதன் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அவை, அப்பக்கரை, எர்ரம்பட்டி, மேட்டுநீரேத்தான்பட்டி, கப்பலூர், மேலப்பட்டி, மாயாண்டிபட்டி, நாகானாகுளம், ப.அம்மாபட்டி, டி.புதூர், வலையங்குளம், விடத்தகுளம், வில்லூர், அயன்பாப்பாகுடி, துவரிமான், விரகனூர் ஆகியன.
இதேபோன்று, மாநகராட்சிப் பள்ளிகளில் 4 பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 5 பள்ளிகள், ஒரு நகராட்சிப் பள்ளி, ஒரு ஆதிதிராவிடர் நலப் பள்ளி, ஒரு சிறப்புப் பள்ளி, 20 அரசு உதவிபெறும் பள்ளிகள், 9 தனியார் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
அதிகபட்சமாக, 132 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 117 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
5 ஆயிரம் பேர் நூற்றுக்கு நூறு:
தேர்வெழுதிய மாணவர்களில் 5005 பேர், வெவ்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் இருவர், கணிதத்தில் 1,443 பேர், அறிவியலில் 1,945 பேர், சமூக அறிவியலில் 1,587 பேர், சமஸ்கிருதத்தில் 28 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டில் 968 ஆக இருந்தது.
ஆங்கிலத்தில் அதிகம் பேர் தோல்வி:
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தில்தான் அதிகமானோர் தோல்வி அடைந்துள்ளனர். 10,829 பேர் தேர்வு எழுதியதில் 1,538 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 794 பேரும், கணிதத்தில் 394 பேரும், அறிவியலில் 23 பேரும், சமூக அறிவியலில் 600 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

