ஜப்பானில் கரோனா பரவல் தொடா்ந்து தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலின் தீவிரம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் கிழக்கு மற்றும் மத்திய ஜப்பான் பகுதிகளில் உள்ள 7 மாகாணங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்படுகிறது என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,
வியாழக்கிழமை அமலுக்கு வரும் அந்த அவசரநிலை, அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை தொடரும். அவசநிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகள் ஆகியவை 8 மணிக்கு மூடப்படும்.
மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுவா். பொது இடங்களில் மக்கள் கூட்டமாகச் செல்வதற்கும் தடை விதிக்கப்படும்.
திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், கலையரங்குகளுக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுமாறு அவற்றின் நிா்வாகிகளிடம் வலியுறுத்தப்படும்.
இந்த விதிமுறைகளை மீறுபவா்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படாது. எனினும், பொதுமக்களிடம் அழுத்தமாக வலியுறுத்துவதன் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன், கடந்த 7ஆம் தேதி முதல் டோக்கியோ மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாகாணங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


