சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தெலங்கானாவில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு

தெலங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 10:32 pm

தெலங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தெலங்கானா முதல்வர் வெளியிட்ட செய்தியில்,

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

மேலும், கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.