வங்கதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான காசிப்பூசில் ஒரு சமூக சமையலறையில் திங்கள்கிழமை அதிகாலை இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. இதில் 4 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துற்சி அதிகாரி கபிருல் ஆலம் கூறியதாவது,
"ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சமையலறைக்குள் உணவு சமைப்பதற்காக அதிகாலை 5 மணியளவில் ஒரு பெண் சென்றுள்ளார். அப்போது சமையல் எரிவாயு உருளை வெடித்ததில், அந்த பெண், அவரது கணவர் உள்பட 4 பேர் பலியாகினர்.
அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


