சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியிலிருந்து விடுவிப்பு

விருப்ப ஓய்வு கோரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உ.சகாயம், தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

News image

சகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியிலிருந்து விடுவிப்பு

Updated On :6 ஜனவரி 2021, 9:00 pm

சென்னை: நேர்மையான அதிகாரி என்று பெயர்பெற்ற சகாயம் ஐஏஎஸ், தமிழக அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணத்திருந்த நிலையில், அரசுப் பணியிலிருந்து விடுவிப்பதாக தமிழக அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னமும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தனது 57வது வயதில் விருப்ப ஓய்வு கேட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா். 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த உ.சகாயம், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். பின் பல மாவட்டங்களில் பணிபுரிந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஏற்கனவே, மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம், புதன்கிழமை அரசுப் பணியிலிருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், மதுரையில் நடந்து வந்த கிரானைட் ஊழலைக் கண்டுபிடித்து அதனை வெளிக் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.