சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலங்கை அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(புதன்கிழமை) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்தார்.

News image

இலங்கை அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

Updated On :6 ஜனவரி 2021, 9:10 pm

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(புதன்கிழமை) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்தார்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில்,மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்க உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இலங்கை அதிபரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

இலங்கை அதிபரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்நிலையில், இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை நேரில் சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்.